நயன்தாரா வரிசையில் இணைந்த அனிருத்! Filter coffee நிறுவனத்தில் முதலீடு மற்றும் முக்கிய பதவி
நயன்தாராவும், அவரது கணவரும் விக்னேஷ் ஷிவன் டிவைன் புட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
அனிருத் முதலீடு
"வி.எஸ். மணி & கோ" என்ற தென்னிந்திய ஃபில்டர் காபி ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார்.
இந்த நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், பிராண்ட் அம்பாசிடராகவும் அனிருத் பணியாற்றுவார்.
இந்த நிறுவனமானது தென்னிந்தியாவில் உள்ள இளைய தலைமுறை நுகர்வோர்களைச் சென்றடைவதை இலக்காக கொண்டுள்ளது.
பாரம்பரிய ஃபில்டர் காபி தயாரிக்க அதிகம் நேரம் தேவைப்படும் நேரத்தில், விரைவாக ரெடிமேட் காபியை வழங்கி வருகிறது.
அண்மையில், சமீபத்தில் வி.எஸ். மணி & கோ நிறுவனம் ஷார்க் டேங்க் நிகழ்ச்சியில் பங்கேற்று இந்தியா முழுவதும் பிரபலமடைந்தது.
இந்த நிறுவனமானது ஜி.டி. பிரசாத், யஷாஸ் அலூர் மற்றும் ராகுல் பஜாஜ் ஆகியோரால் நிறுவப்பட்டது. அடுத்த ஹால்திராம்ஸ் ஆக மாற வேண்டும் என்ற இலக்குடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதன் மொத்த விற்பனை வருவாயில் 60 % ஓன்லைன் சேனல்கள் (Amazon, Zepto, Blinkit ) மூலமாகவும், மீதமுள்ள 40 % ரீடைல் கடைகளில் இருந்தும் பெறுகிறது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட ரீடைல் விற்பனை கடைகளுடன் நிறுவனம் இணைந்துள்ளது.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனத்தில் Series A முதலீட்டு சுற்றில் கெட்டில்பரோ VC நிறுவனம் தலைமையில் முதலீட்டைப் பெற்றது.
தற்போது இந்த நிறுவனத்தில், இசையமைப்பாளர் அனிருத் முதலீடு செய்துள்ளார். இவரை தவிர ரானா டகுபாட்டி, ரன்பீர் கபூர், ஹுமா குரேஷி போன்ற பல பிரபலங்களும் முதலீடு செய்துள்ளனர்.
இந்த நிறுவனத்தில் அனிருத் ரவிச்சந்தர் எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்பது தற்போது தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |