காவ்யா மாறனை கரம் பிடிக்கும் அனிருத்; ஐரோப்பிய நாட்டில் திருமணம், சென்னையில் வரவேற்பு
anirudh to marry kavya maran at greece november 11: இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் - காவ்யா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் நவம்பர் 11ஆம் திகதி நடைபெற உள்ளது.
அனிருத் ரவிச்சந்திரன் - காவ்யா மாறன் திருமணம்
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் SRH அணி உரிமையாளர் காவ்யா மாறனுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக நீண்ட நாட்களாக தகவல் பரவி வந்த தற்போது திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் - காவேரி கலாநிதி ஆகியோர் நேற்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து திருமண வரவேற்பிற்கான அழைப்பிதழை வழங்கினர்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கும் அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். அப்போது மணமகன் அனிருத்தும் உடனிருந்தார்.

நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பங்கேற்கும் திருமண நிகழ்ச்சி வரும் நவம்பர் 11ஆம் திகதி க்ரீஸ்(Greece) நாட்டில் நடைபெற உள்ளது.
அதைத்தொடர்ந்து, நவம்பர் 21 ஆம் திகதி முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கு வகையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.
காவ்யா மாறன், சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் - காவேரி கலாநிதி தம்பதியின் ஒரே மகள் ஆவார்.
மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கொள்ளுப்பேத்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் பேத்தி ஆவார்.
35 வயதான காவ்யா மாறன் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்களை பட்டமும், இங்கிலாந்து வார்விக் பிசினஸ் ஸ்கூலில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.
தொலைக்காட்சி, ரேடியோ, செய்தித்தாள், DTH மற்றும் சினிமா ஆகியவற்றை உள்ளடக்கிய, சன் குழுமத்தில் நிர்வாக இயக்குநராகவும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய அணிகளின் தலைமை நிர்வாகியாகவும் உள்ளார்.
36 வயதான அனிருத் ரவிச்சந்திரன் நடிகர் ரவி ராகவேந்திரா மற்றும் நடன கலைஞர் இலட்சுமியின் மகன் ஆவார். நடிகர் ரவி ராகவேந்திரா ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தின் சகோதரர் ஆவார்.