தமிழ் நடிகையை கரம்பிடித்த CSK முன்னாள் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்! இரண்டாவது திருமணத்திற்கு குவியும் வாழ்த்து
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான அனிருதா ஸ்ரீகாந்த், நடிகை சம்யுக்தா சண்முகநாதனை மணந்துள்ளார்.
அனிருதா ஸ்ரீகாந்த்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த். இவரும் வாரிசு உட்பட படங்களில் நடித்த சம்யுக்தா சண்முகநாதனும் காதலித்து வருவதாக பல வாரங்களாக செய்திகள் பரவி வந்தன.
இந்த நிலையில், அனிருதா ஸ்ரீகாந்த் மற்றும் சம்யுக்தாவின் திருமணம் இந்து முறைப்படி நடந்துள்ளது.
இந்த திருமணத்தில் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டதாக தெரிய வந்துள்ளது. 
இரண்டாவது திருமணம்
திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடக தளங்களில் விரைவாக பரவி வருகின்றன.
ரசிகர்கள் பலரும் புதுமணத் தம்பதிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்த சம்யுக்தாவிற்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். அதேபோல் தனது மனைவியை விவாகரத்து செய்த பின்னர் அனிருதா, சம்யுக்தாவுடன் பழகி வந்துள்ளார்.
இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாற, இன்று இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |