32 கனேடியர்கள் மாயம்... நேபாளப் பெருவெள்ளம் தொடர்பில் அமைச்சர் அனிதா ஆனந்த் தகவல்

Canada Nepal Flood
By Balamanuvelan Aug 29, 2026 07:49 AM GMT
Report

Foreign affairs minister Anita Anand says 32 Canadians unaccounted for after Nepal floods: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான 32 கனேடியர்கள் மாயமாகியுள்ளதாக கனடா வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேபாளப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600ஐக் கடந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சுமார் 2,500 பேர் மாயமாகியுள்ளார்கள்.

32 கனேடியர்கள் மாயம்...

நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமானவர்களில் பாதி பேர் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா அல்லது புனித யாத்திரை சென்றவர்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், நேபாளம் சென்ற 32 கனேடியர்கள் வரை மாயமாகியுள்ளதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். 

32 கனேடியர்கள் மாயம்... நேபாளப் பெருவெள்ளம் தொடர்பில் அமைச்சர் அனிதா ஆனந்த் தகவல் | Anit Anand Says 32 Canadians Missing Nepal Flood

மாயமானவர்களில் பலர் இந்தோ கனேடியர்கள், அவர்கள் கைலாச மலை மற்றும் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்றவர்கள் என கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

நேபாளப் பெருவெள்ளம்: மாயமான கனேடிய தம்பதியர்

நேபாளப் பெருவெள்ளம்: மாயமான கனேடிய தம்பதியர்

மாயமான கனேடிய குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் எத்தனை பேர், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார் அனிதா ஆனந்த். 

32 கனேடியர்கள் மாயம்... நேபாளப் பெருவெள்ளம் தொடர்பில் அமைச்சர் அனிதா ஆனந்த் தகவல் | Anit Anand Says 32 Canadians Missing Nepal Flood

விடயம் என்னவென்றால், சுற்றுலா அல்லது புனித யாத்திரை சென்ற தங்கள் குடும்பத்தினர் பெருவெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்கள் என்னும் செய்தி தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ள பலரும், அவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாததால் தாங்கள் கடும் மன அழுத்தத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்நிலையில், கனடா தூதரக அதிகாரிகள், நேபாளத்தில் மாயமான கனேடியர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் கனடாவிலிருக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் அனிதா ஆனந்த், நேபாளப் பெருவெள்ளதால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், நேபாளப் பெருவெள்ள நிவாரணப் பணிக்காக 5 இல்லியன் கனேடிய டொலர்களை கனடா வழங்குகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US