பிரகாசமாகவும், அழகாகவும் இருக்கட்டும்! தமிழ்பெண்ணான கனேடிய அமைச்சர் அனிதா ஆனந்தின் வைரல் புகைப்பட பதிவு
கனடிய பாதுகாப்பு அமைச்சரான அனிதா ஆனந்த தீபாவளி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவு வைரலானது.
கனேடிய பொது தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் oakville தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற அனிதா நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்று கொண்டார். அனிதாவின் தந்தை தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்த நிலையில் அமைச்சர் அனிதா ஆனந்த தீபாவளி வாழ்த்து சொன்ன டுவிட்டர் பதிவு பெரியளவில் வைரலானது. அதில் வணக்கம் கூறியபடி தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், நமஸ்தே, கனடா, இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகள்.
இருளுக்கு மேல் ஒளியையும் தீமைக்கு மேல் நன்மையையும் கொண்டாட வேண்டிய நேரம் இது, உங்கள் நாள் பிரகாசமாகவும், அழகாகவும் இருக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.
Namaste - today, I wish all of my friends and family here in ??, ?? and around the world a very happy #Diwali . This is a time to celebrate light over darkness and good over evil. May your day be bright and beautiful! #Diwali2021 ?? pic.twitter.com/QJcATvSXAZ
— Anita Anand (@AnitaOakville) November 4, 2021