கனடாவில் அமைச்சரான தமிழ்ப்பெண் அனிதாவின் கணவர் யார் தெரியுமா? குடும்ப புகைப்படங்களுடன் சுவாரசிய தகவல்கள்
கனடாவில் புதிய பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அனிதா ஆனந்தின் கணவர் குறித்தும் அவரின் சகோதரிகள் குறித்தும் சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த கனேடிய பொது தேர்தலில் லிபரல் கட்சி வெற்ற நிலையில் மீண்டும் பிரதமர் ஆனார் ஜஸ்டின் ட்ரூடோ. லிபரல் கட்சி சார்பில் oakville தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் வெற்றி பெற்றார்.
அனிதாவின் தந்தை தமிழகத்தை சேர்ந்தவர், தாயார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். அனிதா ஆனந்த் 14,511 வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார். இந்த நிலையில் அனிதாவை நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக அறிவித்தார் ஜஸ்டின் ட்ரூடோ. இதையடுத்து அமைச்சராக அவர் பதவியேற்று கொண்டார்.
அனிதாவுக்கு கீதா, சோனியா என இரு சகோதரிகள் உள்ளனர். கீதா ரொறன்ரோவில் வழக்கறிஞராக உள்ள நிலையில் மற்றொரு சகோதரி சோனியா மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளராக இருக்கிறார்.
அனிதா ஆனந்தின் கணவர் பெயர் ஜான் நோல்டன். இந்த தம்பதிக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். ஜான் தனது இளங்கலைப் படிப்பை மேற்கத்திய பல்கலைக்கழகத்தில் முடித்த நிலையில் பொருளாதாரத்தில் தங்கப் பதக்கம் வென்றவர். பின்னர், அவர் தனது எம்பிஏ படிப்பை ஒட்டவா பல்கலைக்கழகத்தில் படித்தார்.
ஜான் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றின் மூத்த எம்.டி மற்றும் வணிக மேலாளர் என உயர் பதவியில் உள்ளார், ஜான் தனது மனைவி அனிதா மற்றும் பிள்ளைகளுடன் Oakvilleவில் 17 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.