கனடாவில் இனவாதம் மற்றும் பாகுபாடுகளுக்கு இடமில்லை! தமிழ்ப்பெண்ணான பிரபலம் பேசிய வீடியோ
கனடாவில் Emancipation நாள் கடைபிடிக்கப்படும் நிலையில் அது தொடர்பாக நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளார்.
விடுதலை நாள் எனப்படும் Emancipation நாள் ஆகஸ்ட் 1 கனடாவில் கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்ப்பெண்ணாக பிறந்து கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அனிதா ஆனந்த் மக்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
Today is Emancipation Day. On this day, we take time to reflect upon the dark legacy of slavery in Canada, its devastating impacts on the Black community, and the persistent consequences that many Black Canadians still experience today. pic.twitter.com/lnZffRMRkZ
— Anita Anand (@AnitaAnandMP) August 1, 2022
அந்த வீடியோவில், இந்த நாளில், கனடாவில் அடிமைத்தனத்தின் இருண்ட பாரம்பரியம், கறுப்பின சமூகத்தில் அதன் பேரழிவு தாக்கங்கள் மற்றும் பல கறுப்பின கனடியர்கள் இன்றும் அனுபவிக்கும் தொடர்ச்சியான விளைவுகளைப் பற்றி சிந்திக்க நேரம் எடுத்துக்கொள்கிறோம்.
இனவாதம் மற்றும் பாகுபாடுகளுக்கு கனடாவில் இடமில்லை. இன்றும் ஒவ்வொரு நாளும், கறுப்பினருக்கு எதிரான இனவெறி மற்றும் பாகுபாட்டிற்கு எதிரான போராட்டத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் புதுப்பித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
Racism and discrimination have no place in Canada. Today and every day, we renew our commitment to the fight against anti-Black racism and discrimination as we continue to build a more inclusive and equitable Canada for everyone.
— Anita Anand (@AnitaAnandMP) August 1, 2022