நாங்கள் கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள்! தமிழரான தந்தை தொடர்பில் பேசிய அமைச்சர் அனிதா ஆனந்த்
கனடாவின் பாதுகாப்பு அமைச்சரான தமிழ் வம்சாவளி பெண் அனிதா ஆனந்த் தனது பெற்றோர் தொடர்பில் பழைய மகிழ்ச்சியான நினைவுகள் குறித்து பேசியுள்ளார்.
அனிதா ஆனந்தின் தந்தை தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இந்நிலையில் சமீபத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் அனிதா ஈடுபட்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டார்.
அந்த பதிவில், நோவா ஸ்கோடியா பனிச்சறுக்கு விளையாட்டில் இளம் வயதில் நாங்கள் கழித்த பல வார இறுதி நாட்கள் எனக்கு நினைவுக்கு வருகிறது. எனது தந்தை மற்றும் தாய் இருவரும் எல்லா விளையாட்டு மற்றும் செயல்பாடுகளிலும் எங்களைச் சேர்த்துவிட்டனர், எங்களின் வார இறுதி நாட்கள் பொதுவாக வெளியில் தான் செலவிடப்படும்.
Today reminded me of the many weekends we spent in Nova Scotia skiing. My parents enrolled us in almost every sport and activity possible and weekends were usually spent outside. pic.twitter.com/QtFiMEkRkN
— Anita Anand (@AnitaAnandMP) February 5, 2022
நாங்கள் கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் என்பதாலோ என்னவோ, இந்நாடு வழங்கும் அனைத்து வசதிகளை நாங்கள் பாராட்ட வேண்டும் என்பதை உறுதி செய்ய பெற்றோர் விரும்பினர்.
நான் இப்போது என் பெற்றோர்களை பற்றியும், என் குழந்தை பருவத்தையும் நினைத்து பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Maybe as immigrants to Canada, they wanted to make sure that we would be able to appreciate all that this country has to offer. On days like today, when we are able to enjoy an amazing ski in the sun, I think of them and our childhood.
— Anita Anand (@AnitaAnandMP) February 5, 2022