உக்ரைன் தொடர்பில் தமிழ்ப்பெண்ணான கனேடிய பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட வைரல் புகைப்படம்
தமிழ்வம்சாவளி பெண்ணான கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த டுவிட்டரில் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது.
கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர் அனிதா ஆனந்த். இவரின் தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில் உக்ரைன் தொடர்பில் அனிதா ஒரு பதிவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில், ஒவ்வொரு ஆண்டும், மே மாதத்தின் மூன்றாவது வியாழன் அன்று, உலகெங்கிலும் உள்ள உக்ரேனியர்கள் உக்ரேனிய கலாச்சாரத்தின் முக்கிய அம்சமான வைஷிவங்கஸ், எம்ப்ராய்டரி உடையை அணிந்து பெருமையுடன் உக்ரைனின் வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றைக் கொண்டாடுகிறார்கள்.
உக்ரைனின் பெருமைமிக்க நண்பராக, நானும் இன்று வைஷிவங்காவை அணிவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Each year, on the third Thursday of May, Ukrainians around the world celebrate Ukraine’s rich culture and history by proudly wearing Vyshyvankas, embroidered shirts that are a staple of Ukrainian culture. As a proud friend of Ukraine, I am happy to wear a Vyshyvanka today! pic.twitter.com/HEAZEqSRJe
— Anita Anand (@AnitaAnandMP) May 19, 2022