நான் ஒரு தமிழ் கனேடியராக! பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் பெருமிதத்துடன் வெளியிட்ட செய்தி
கனடாவில் கடந்த 2010ல் இருந்து ஜனவரியானது தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்நாட்டின் அரசியல், சமூக, பண்பாடு மற்றும் பொருளாதாரத்துக்கு தமிழர்கள் அளித்துள்ள பங்களிப்பை நினைவுக்கூரும் வகையில் இது கொண்டாப்படுகிறது.
அந்த வகையில் தமிழ்ப்பெண்ணாக பிறந்து கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அனிதா ஆனந்த் அனைவருக்கும் தமிழ் பாரம்பரிய மாத வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
January marks Tamil Heritage Month in ??. Our country is home to one of the largest Tamil diasporas in the world. This month, we show our appreciation for the invaluable contributions of Tamil Canadians & work to build a more inclusive Canada. pic.twitter.com/0AxPuFFHzi
— Anita Anand (@AnitaAnandMP) January 8, 2022
அவரின் பதிவில், ஜனவரி மாதம் கனேடிய கொடியில் தமிழ் பாரம்பரிய மாதத்தைக் குறிக்கிறது. உலகிலேயே பெரியளவில் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடு நமது நாடு.
இந்த மாதம், தமிழ் கனடியர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காக நமது பாராட்டுகளை அவர்களுக்கு தெரிவிக்கிறோம்.
ஒரு தமிழ் கனேடியராக அனைவருக்கும் தமிழ் பாரம்பரிய மாத வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
As a Tamil Canadian, I wish you all a very Happy Tamil Heritage Month!
— Anita Anand (@AnitaAnandMP) January 8, 2022