பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்! கனேடிய பிரதமரை வாழ்த்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான தமிழ்ப்பெண்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவுக்கு நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரான தமிழ்ப்பெண் அனிதா ஆனந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ஆம் திகதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதையடுத்து நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அனிதா ஆனந்த் டுவிட்டரில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.
அவரின் டுவிட்டர் பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்! கனடியர்களுக்காக நாம் இணைந்து பணியாற்றுவதைத் தொடர ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்நாள் குடும்பத்துடன் இணைந்து அற்புதமான நாளாக இருந்திருக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Happy birthday Boss! I am looking forward to continuing our work together for Canadians. Hope you have a wonderful day with your family. ? pic.twitter.com/HV7Z0xmUjN
— Anita Anand (@AnitaAnandMP) December 25, 2021