ரூ.17.74 கோடி வருமானம்.., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஆர்.அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சொத்துகள் முடக்கம்
தமிழகத்தின் மீன்வளத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். இவர், கடந்த 2009-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
இவர் அதிமுகவில் இருந்த காலத்தில் 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார்.
3 மாத போராட்டத்திற்கு பிறகு டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து.., இந்திய அரசின் அறிவிப்பால் அரிட்டாபட்டி மக்கள் கொண்டாட்டம்
அப்போது, இவர் மீது கடந்த 2006-ம் ஆண்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில், வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததற்கான முகாந்திரம் இருந்ததால் இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2022-ம் ஆண்டில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் 160 ஏக்கர் நிலம் உட்பட ரூ.6.5 கோடி மதிப்பிலான 18 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
இந்நிலையில் தற்போது, அவரது ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், அமலாக்கத்துறையால் முடக்கிய சொத்துக்களில் இருந்து வரும் வருவாயை பல்வேறு நிறுவனங்களில் மறைமுகமாக முதலீடு செய்து அதன் மூலம் ரூ.17.74 கோடி வருமானம் ஈட்டியிருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |