பாஜக - திமுக கூட்டணி? உறுதிப்படுத்தும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
திமுக - பாஜக கூட்டணி அமைக்க உள்ளது என்பதை குறிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
6 மாதத்தில் கவிழும் தவெக ஆட்சி?
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் பிற கட்சிகளின் உதவியுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

முன்னதாக திமுக - அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயற்சித்ததாக திமுகவின் கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனைத்தொடர்ந்து, தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தாக 8 பேரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது.
இதில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பங்கு இருப்பதாக கூறி அவருக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது.
பாஜக - திமுக கூட்டணி?
இந்த சூழலில், தவெக ஆட்சி இன்னும் 6 மாதங்கள் தான் இருக்கும் எனவும், திமுக எம்பி மத்திய அமைச்சர் ஆவார் எனவும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த ஆட்சி இருக்கும். நான் குறிப்பிட்டு சொல்கிறேன் இன்னும் 6 மாத காலத்திற்குள் இந்த ஆட்சி போகவில்லை என்றால் பார்ப்போம்.

கழக தோழர்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம். 6 மாத காலத்திற்குள் தமிழ்நாடு முதலமைச்சராக அண்ணன் ஸ்டாலின் வருவார்கள்.
நம்முடைய இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கட்சியை நடத்துவார்கள். நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா போன்றவர்கள் எல்லாம் டெல்லியில் அமைச்சர்களாக அமர்வார்கள்.
அப்படி ஒரு நிலை வரும்போது நீ சினிமாவில் என்ன தப்பு செய்தாய், வருமான வரித்துறையில் என்ன ஏமாற்றினாய் என அனைத்தும் வெளிவரும்" என தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பிக்கள் டெல்லியில் அமைச்சர் ஆவார்கள் என பேசியதன் மூலம், பாஜக உடன் கூட்டணி அமைக்க திமுக முயற்சித்து வருகிறதா கேள்வி எழுந்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி போன்றோர் மீதான வழக்குகளை தவெக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்ட நிலையில், குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் பாஜக உடன் திமுக கூட்டணி அமைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |