அஞ்சலி டெண்டுல்கர் மும்பையில் வாங்கியுள்ள புதிய வீடு: விலையை கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
32 லட்சத்தில் சிறிய அடுக்குமாடி குடியிருப்பு
ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட சொத்து விவரங்கள் மூலம், மும்பையின் விராரில்(Virar) பகுதியில் அஞ்சலி டெண்டுல்கர் புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பெனிசுலா ஹைட்ஸ்(Peninsula Heights) என்ற கட்டிடத்தில் வாங்கப்பட்டுள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பின் விலை ரூ.32 லட்சம் மட்டுமே ஆகும்.
சொத்து விவரங்கள்
ரூ.32 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ள இந்த மூன்றாவது மாடி குடியிருப்பு 391 சதுர அடி பரப்பளவு கொண்டது ஆகும்.
2025ம் ஆண்டு மே 30ம் திகதி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட இந்த சொத்திற்கு ரூ.1.92 லட்சம் முத்திரைத் தீர்வையும், 1% சலுகைக்கு பிறகு ரூ. 30000 பதிவு கட்டணமும் செலுத்தி அஞ்சலி டெண்டுல்கர் இந்த சொத்தை வாங்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை, பெண்கள் சொந்தமாக வீடு வாங்கும் போது 1% வரிச்சலுகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலி டெண்டுல்கர் பற்றிய குறிப்பு
குழந்தை மருத்துவரான அஞ்சலி டெண்டுல்கர் 1995ம் ஆண்டு மே 24ம் திகதி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை திருமணம் செய்து கொண்டார்.
மும்பை சர்வதேச பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அஞ்சலி, கிராண்ட் மருத்துவ கல்லூரி மற்றும் சர்.ஜே.ஜே மருத்துவமனையில் MBBS பட்டம் பெற்றார்.
இவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு சமீபத்தில் சானியா சந்தோக் என்றவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |