பிரபல போதகர் அஞ்செம் சௌத்ரி மீது வழக்கு: தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு திரட்டியதாகவும் குற்றச்சாட்டு
லண்டனில் வெறுப்பு பேச்சால் பிரபலமடைந்த போதகர் அஞ்செம் செளதரி மீது மூன்று பயங்கரவாத வழக்கு சுமத்தப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக
தொடர்புடைய போதகர் மீது பயங்கரவாத அமைப்பை வழிநடத்தியது, தடைசெய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருப்பது, தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவு திரட்ட கூட்டங்களில் உரையாற்றுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டுள்ளது.
@rex
கனடாவைச் சேர்ந்த 28 வயதான காலித் ஹுசைன் என்பவரும், தடைசெய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருந்ததாக லண்டன் பொலிசார் குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
ஜூலை 17ம் திகதி ஹுசைன் லண்டன் திரும்பிய நிலையில் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து 56 வயதான அஞ்செம் செளதரி உட்பட இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாதச் சட்டம் 2000 மற்றும் பிரிவு 41 இன் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
@nickedwards
இவர்கள் இருவரும் தடை செய்யப்பட்ட எந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறித்து விசாரணை முன்னெடுக்கப்படுவதாக ஜூலை 17ம் திகதி மாநகர பொலிசார் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்திருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |