பிரபல தமிழ் திரைப்பட நடிகரை விட அவர் மனைவிக்கு 26 வயது குறைவு! சேர்ந்து உடற்பயிற்சி செய்து பெறும் நன்மைகள்
நடிகர் மிலண்ட் சோமனும், அவர் மனைவி அங்கிதாவும் சேர்ந்தே தினமும் செய்யும் உடற்பயிற்சி
தம்பதிகள் இணைந்து உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
தமிழ் திரைப்பட வில்லன் நடிகர் மிலண்ட் சோமனை மணந்த அவரை விட வயதில் மிக குறைவான பெண் கணவருடன் சேர்ந்து ஒன்றாக உடற்பயிற்சி செய்வது தொடர்பான சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, வித்தகன், அலெக்ஸ் பாண்டியன் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளவர் மிலண்ட் சோமன் (57). இவர் அங்கிதா கொன்வார் (31) என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.
இன்று அங்கிதாவுக்கு பிறந்தநாள் ஆகும். கணவன், மனைவி இருவருமே உடலை கட்டுகோப்பாக வைத்து கொள்வதில் ஆர்வம் காட்டுபவர்கள், இருவரும் சேர்ந்து தான் உடற்பயிற்சி செய்வார்கள். இது தொடர்பான புகைப்படங்களையும் அங்கிதா அவ்வபோது வெளியிடுவார்.
தம்பதியாக சேர்ந்து உடற்பயிற்சி செய்தால் கிடைக்கும் நன்மைகள்
துணையுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது, அது தம்பதிக்குள் பிணைப்பை உருவாக்க உதவுகிறது. பயிற்சிகளை ஒன்றாகச் செய்வது அன்பை வலுவாக்கும்.
Instagram/ Ankita Konwar
நீங்கள் ஒன்றாக வொர்க்அவுட் செய்யும்போது, உடற்பயிற்சி செய்வதை தவற விடாமல் இருக்க முடியும். ஏனெனில், தம்பதிகளில் ஒருவர் உடற்பயிற்சி செய்ய விரும்பாவிட்டாலும், மற்றவர் உங்களைப் ஊக்கப்படுத்தி உடற்பயிற்சி செய்ய வைப்பார்.
தம்பதிகள் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான போட்டிக்கு உதவும். இருவரும் உங்களுக்கான உடற்பயிற்சி இலக்குகளை அமைத்துக் கொண்டால், அது உங்களை அர்ப்பணிப்புடனும் கவனத்துடனும் வைத்திருக்கும்.
இது ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தவும் ஊக்குவிக்கவும் உதவும். தம்பதிகள் ஒன்றாக உடற்பயிற்சி செய்யும் போது, அவர்கள் ஒருவருக்கொருவர் உந்துதலாக இருக்க முடியும். ஒருவருக்கு எதுவும் இல்லாத நாட்களில், மற்றவர் அவர்களை வொர்க்அவுட் செய்ய ஊக்குவிக்கலாம்.