பிரித்தானியாவில் 11 வயது இளம்பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்: பிரபஞ்ச மையம் என பெற்றோர் உருக்கம்
அன்னபெல் கிரீன்ஹால்க் என்ற இலக்கணப் பள்ளியில் சேர்ந்த 11 வயதான இளம் பெண் உயிரிழப்பு.
அன்னாபெல் கிரீன்ஹால்க்-யை அவர்களது குடும்பத்தின் "பிரபஞ்ச மையம்" என்று பெற்றோர்கள் விவரித்துள்ளனர்.
பிரித்தானியாவில் பள்ளி தொடங்கிய சில வாரங்களுக்கு பிறகு 11 வயதான இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் அல்செஸ்டர் இலக்கணப் பள்ளியில் சேர்ந்த 11 வயதான இளம் பெண் அன்னபெல் கிரீன்ஹால்க் (Annabel Greenhalgh) சில வாரங்களுக்கு பிறகு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவரது இறப்பு தொடர்பாக பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், வார்விக்கைச் சேர்ந்த அன்னாபெல்லின் பெற்றோர்களான ஜோசி மற்றும் கிரேக், அக்டோபர் 14 வெள்ளிக்கிழமை அன்று அன்னாபெல் காலமானதை அறிவிப்பதில் நாங்கள் முற்றிலும் பேரழிவிற்கு ஆளாகிறோம் என தெரிவித்துள்ளனர்.
Image: Photo provided by family
அத்துடன் அன்னாபெல் கிரீன்ஹால்க்-யை அவர்களது குடும்பத்தின் பிரபஞ்ச மையம் என்று பெற்றோர்கள் விவரித்துள்ளனர்.
அவளுக்கு அழகான, கனிவான ஆன்மா இருந்தது. அவள் மென்மையானவள், பிரமிக்கத்தக்க வகையில் பிரகாசமானவள், வேடிக்கையானவள், எப்போதும் அனைவரையும் உள்ளடக்கியவள். அவள் பலரால் விரும்பப்பட்டவள்.
Google Maps
மேலும், எங்கள் அதிர்ச்சி, துக்கம் மற்றும் முழுமையான வெறுமையின் அளவு கற்பனை செய்ய முடியாதது, அவள் எங்கள் பிரபஞ்சத்தின் மையமாக இருந்தாள், அவளது இழப்பால் எங்கள் இதயங்கள் நொறுங்கிவிட்டன எனத் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: போரிஸ் விலகியதையடுத்து முக்கிய டோரி எம்.பி எடுத்த முடிவு: 95% ரிஷி சுனக் வெற்றி உறுதி
அன்னபெல் கிரீன்ஹால்க் இறப்பிற்கு அல்செஸ்டர் கிராமர் பள்ளி முதல்வர் ரேச்சல் தோர்ப் அஞ்சலி செலுத்தியுள்ளார், அதில் இன்று AGS எங்கள் அற்புதமான Y7 மாணவர்களில் ஒருவரான அனாபலின் எதிர்பாராத மரணம் அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.