மகளிர் ஆஷஸ் டெஸ்டில் 163 ரன் விளாசிய வீராங்கனை! எழுந்து நின்று கைதட்டிய ரசிகர்கள்
மகளிர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டில் அவுஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் சதம் விளாசினார்.
ஆஷஸ் டெஸ்ட்
மெல்போர்னில் மகளிர் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 170 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. நட் சிவர் பிரண்ட் 51 ஓட்டங்கள் எடுத்தார். அலானா கிங் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் ஜார்ஜியா வோல் 12 ஓட்டங்களிலும், லிட்ச்பீல்ட் 45 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அனபெல் சதர்லேண்ட்
எனினும், மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனபெல் சதர்லேண்ட் (Annabel Sutherland) சதம் விளாசினார். இது அவருக்கு மூன்றாவது டெஸ்ட் சதம் ஆகும்.
THIRD TEST CENTURY for the 23-year-old Annabel Sutherland! 🤯
— Women’s CricZone (@WomensCricZone) January 31, 2025
She is the first woman to score a Test hundred at the iconic MCG! #Ashes | #AUSvENG pic.twitter.com/5HDf26HrQW
மேலும், MCGயில் சதம் அடித்த முதல் வீராங்கனை எனும் பெருமையை பெற்றார். தொடர்ந்து ஆடிய அனபெல் சதர்லேண்ட் 258 பந்துகளில் 1 சிக்ஸர், 21 பவுண்டரிகளுடன் 163 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதுவரை அவுஸ்திரேலிய அணி 345 ஓட்டங்கள் குவித்துள்ளதுடன்,176 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |