அடுத்த தேர்தலில் போட்டி - அண்ணாமலை அறிவிப்பு
அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
அண்ணாமலை அறிவிப்பு
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது நிலைப்பாடு குறித்து விளக்கி 5 பக்க ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
தற்போது அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில், தனது புதிய கட்சி குறித்து நேரலையில் பேசி வருகிறார்.

இதில் பேசிய அவர், "ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தேன். சொல்லிவிட்டு விலகுவதே தமிழர் பண்பு.
பாஜகவில் இருந்த 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத் தந்தது இல்லை. தமிழ்நாட்டின் அடையாளத்தோடு பாஜக இருக்க வேண்டும் என விரும்பினேன்.
தமிழ்நாட்டில் அடுத்து நடக்க உள்ள தேர்தலில் நமது அரசியல் கட்சி போட்டியிடும். பாஜக உடன் கடந்த 18 மாதங்களாக கருத்து வேறுபாடு நீடித்தது. கடந்த டிசம்பர் 4ம் தேதியே பாஜகவில் இருந்து விலகுவதை தெரிவித்துவிட்டேன்.
we the Leaders என்ற அமைப்பில் நீங்கள் தன்னார்வலராக இணைத்து கொள்ள வேண்டும். abdul kalam centre for ethics and politics என்ற பெயரில் அரசியல் பயிற்சி மையம் உருவாக்கப்படும். அங்கு முறையான பயிற்சி வழங்கப்படும். அரசியல் இயக்கம் சரியான நேரத்தில் கட்சியாக மாறும்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |