முதலமைச்சர் விழாவில் மாணவிகளின் துப்பட்டா அகற்றம்.., அண்ணாமலை கண்டனம்
சென்னை எழும்பூரில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர் பலர் பங்கேற்று இருந்தனா்.
இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக மாணவிகள் அணிந்து வந்த கருப்பு துப்பட்டாக்களை அகற்றும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் மாணவிகள் தாங்கள் அணிந்து வந்த கருப்பு துப்பட்டாக்களை கழற்றி வெளியே வைத்துவிட்டு பங்கேற்றனா்.
தற்போது இதுதொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனா்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாணவிகளின் கருப்பு துப்பட்டாக்களை அகற்றிய விவகாரத்திற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது..,
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், "கருப்பு சால்வை" அணிந்த மாணவிகள் மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன் அவற்றை கழற்றுமாறு கேட்டுக் கொண்டனர்.
திமுகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர்.
இது எவ்வகை எதேச்சதிகாரம்?" இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
In an event participated by TN CM Thiru @mkstalin, female students wearing “black shawls” were asked to remove them before entering the hall.
— K.Annamalai (@annamalai_k) January 5, 2025
Fear has crept in, and they are utterly clueless & have become hopeless. What kind of autocracy is this? pic.twitter.com/JySnt0pRGZ
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |