தெருவோர கடையில் முறுக்கு சுட்ட அண்ணாமலை! மோடிக்கு பார்சல் கொடுத்த கடைக்காரர்
தமிழக மாவட்டம், திருச்சி மணப்பாறையில் உள்ள தெருவோரக் கடையில் அண்ணாமலை முறுக்கு சுடும் வீடியோ வைரலாகி வருகிறது.
நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை
நேற்று மணப்பாறையில் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் சாதாரண மக்கள் பயன் பெற்றுள்ளனர். இந்திய பிரதமர் மோடியால் தான் ஜல்லிக்கட்டு தடை விலகியது.
திமுக ஆட்சியில் மது குடிப்பவர்களால் வீட்டிற்கு கொடுக்க வேண்டிய பணம் மதுக்கடைகளுக்கு செல்கிறது. காங்கிரஸ் கட்சி காலத்தில் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி 93 முறை பல ஆட்சிகளை கலைத்துள்ளது. ஆனால், மோடி ஆட்சி அப்படி எதையும் கலைக்கவில்லை" என்றார்.
முறுக்கு சுடும் வீடியோ
இதனைத்தொடர்ந்து, மணப்பாறை காமராஜர் சிலை அருகே முறுக்குக் கடை ஒன்றில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முறுக்கு சுட்டு சுவைத்து பார்த்தார்.
விவசாயிகள் முதல் தொழிலாளர்கள் வரை அவர்களின் கஷ்டங்களை அறிந்தவர் நம் தலைவர் @annamalai_k , தலைவரின் மணப்பாறை முறுக்கு ??#Annamalai #EnMannEnMakkal #Manapaarai pic.twitter.com/JmZ09j7YgE
— sankar s ?? (@ssankar2634) November 5, 2023
மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொடுக்குமாறு முறுக்கு பார்சலை கடைக்காரர் அண்ணாமலையிடம் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |