லண்டனுக்கு புறப்பட்ட அண்ணாமலை! வாழ்த்து சொல்லி வழியனுப்பிய சரத்குமார்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனுக்கு புறப்பட்ட நிலையில் அவருக்கு சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லண்டன் புறப்பட்ட அண்ணாமலை
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர் ஆவார்.
இதற்காக, 3 மாதம் அண்ணாமலை லண்டனில் தங்குகிறார். இதற்கான மொத்த செலவையும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமே ஏற்கிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணாமலை லண்டன் புறப்பட்டார். வரும் நவம்பர் மாதம் மீண்டும் அண்ணாமலை தமிழகம் திரும்புவார்.
சரத்குமார் வாழ்த்து
இந்நிலையில், லண்டனுக்கு புறப்பட்ட அண்ணாமலைக்கு சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து படிப்பதற்காக நாளை லண்டன் செல்லும், பாஜக தமிழக மாநிலத்தலைவர் தஅண்ணாமலையின் நோக்கமும், குறிக்கோளும் இனிதே நிறைவேறி, வெற்றியோடும், மனநிறைவோடும் தாயகம் திரும்ப வேண்டுமென்று உளமார வாழ்த்துகிறேன்.
பொறுப்புமிக்க, அதிகாரம் நிறைந்த அரசுப் பணியை உதறிவிட்டு தேசப்பணி ஆற்ற விரும்பியவர். மூத்த நிர்வாகிகளை அரவணைத்து, மிகக் குறுகிய காலத்தில் தமிழகத்தில் பாஜக எனும் கட்சியை முக்கிய எதிர்கட்சியாக அறியப்படச் செய்தவர்.
இவைகள் மட்டுமல்லாமல் தமிழக அரசியல் களத்திலும், மக்கள் மனதிலும் மிக முக்கியமான இடத்தை இந்த இளம்வயதிலேயே ஈர்த்து வைத்திருப்பவர்.
நேர்மையிலும், உழைப்பிலும், தன்னம்பிக்கையிலும், தேசப்பணியிலும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் அன்புச் சகோதரர் அண்ணாமலையின் வெளிநாட்டுப் பயணமும், கல்வியும் வெற்றிகரமாக அமைய வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
தமிழ் அன்னையை வணங்குவோம்! பாரத அன்னையை போற்றுவோம்!" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |