அண்ணாமலைக்கு திடீரென உடல்நலக்குறைவு.. 2 வாரம் ஓய்வு வேண்டும்.. நடைபயணம் ஒத்திவைப்பு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், என் மண் என் மக்கள் நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை நடைபயணம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள் யாத்திரை' என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இந்த பாத யாத்திரையை கடந்த ஜூலை 28 ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது இருந்து அண்ணாமலை பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
உடல்நலக்குறைவு
இந்நிலையில், நாளை மறுநாள் (அக்டோபர் 06) கோவை மேட்டுப்பாளையம் பேரவை தொகுதியில், அண்ணாமலையின் நடைபயணம் தொடங்கவிருந்த நிலையில், அக்டோபர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதாவது, அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருமல், தொண்டை வலி, உடல்வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சனை அண்ணாமலைக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நமது மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்களின் #EnMannEnMakkal நடைபயணம் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) October 4, 2023
நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்பதை… pic.twitter.com/3irj0T65Zq
மேலும், இரு வாரங்கள் அண்ணாமலை ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்ததால் நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |