பெரியார் விவகாரத்தில் சீமானுக்கு ஆதரவு குரல் கொடுத்த அண்ணாமலை
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய விவகாரத்திற்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை ஆதரவு
தந்தை ஈ.வெ.ரா பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீமானை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும், சீமான் மீது திமுக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரியார் குறித்து சீமான் பேசியது சரிதான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை பேசுகையில், "பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு ஆதாரங்களை நான் வெளியிடுகிறேன். அவர், எப்போது எங்கு பேசினார் என்று ஆதாரங்களை வெளியிடுகிறேன். அவர் பேசியதை பொதுவெளியில் கூறினால் நாகரீகமாக இருக்காது.
யுஜிசி புதிய விதி குறித்து நகலை வழங்கியுள்ளோம். நீங்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |