நடிகைகளின் இடுப்பை கிள்ளி விஜய் அரசியல் செய்கிறார்: அண்ணாமலை குற்றச்சாட்டு
நடிகைகளின் இடுப்பை கிள்ளி விஜய் அரசியல் செய்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணாமலை பேசியது
டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டி பாஜக சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.
இதில், பாஜக தலைவர் அண்ணாமலை தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் மாலை 6 மணிக்கு மேல் அவர்களை விடுவித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "பள்ளி குழந்தைகள் போல தமிழக வெற்றி கழகம் அரசியல் செய்கிறது. சினிமா சூட்டிங்கில் நடிகைகளில் இடுப்பை கிள்ளி விஜய் அரசியல் செய்கிறார்.
நான் களத்தில் நின்று போராடுகிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் Work from home அரசியல் செய்கிறாரா?
அவருக்கு 50 வயதில் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்று தோன்றியதா? 30 வயதில் என்ன செய்தார். திமுகவின் பி டீமாக தமிழக வெற்றி கழகம் இருக்கிறது.
படப்பிடிப்பில் இருந்து கொண்டு அறிக்கை அனுப்பும் விஜய்-க்கு மக்களின் கஷ்டத்தை பற்றி என்ன தெரியும். படத்தில் புகை பிடிப்பது, மது குடிப்பது எல்லாம் செய்து டாஸ்மாக் குறித்து பேசுவதற்கு யார் உரிமை கொடுத்தது. குல்லா போட்டுக் கொண்டு இஃப்தார் விருந்தில் பங்கேற்றால் போதுமா?" என்று பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |