விஜய் கட்சியில் இருப்பதே குழந்தைகள் தான்.., CHILDREN'S WING குறித்து அண்ணாமலை கிண்டல்
தமிழக வெற்றி கழக கட்சியில் இடம்பெற்றுள்ள அணிகள் குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
அண்ணாமலை கிண்டல்
தமிழக வெற்றி கழக கட்சியில் 28 அணிகள் உருவாக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில் திருநங்கைகள், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் குழந்தைகளை அரசியல் கட்சிகளில் சேர்க்கக்கூடாது என்று இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் குழந்தைகள் அணி உருவாக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே திருவான்மியூரில் நேற்று மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "தமிழக வெற்றி கழக கட்சியில் இருப்பதே குழந்தைகள் தான்.
அதனால் தான் குழந்தைகள் விங் என உருவாக்கியுள்ளனர். புதியதாக கட்சி உருவாக்கியுள்ள தலைவர் ஒருவர் மத்திய பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. குறைப்பு பற்றி எதுவும் இல்லை. ஜி.எஸ்.டி. கவுன்சில் வேறு பட்ஜெட் வேறு" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |