3 -வது கணவருடன் சேர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ள அன்னபூரணி அரசு அம்மா
தன்னை அம்மன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய அன்னபூரணி அரசு அம்மாவிற்கு மூன்றாவது திருமணம் நேற்று (நவம்பர் 28) நடைபெற்று முடிந்துள்ளது.
3 -வது திருமணம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் அன்னபூரணி. இவர், தன்னை ஆதிபரா சக்தி என்று கூறி மக்களுக்கு ஆசி வழங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ராஜா தோப்பில் ஆசிரமம் நடத்தி மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். இவருக்கு, முதல் திருமணம் நடந்து பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, கணவர் மற்றும் குழந்தையை விட்டுவிட்டு அவர் பிரிந்தார். பின்னர், அரசு என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அரசு என்பவர் இறந்த பிறகு 'அன்னபூரணி அரசு அம்மன்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக, "நானும் அரசுவும் திருமணம் செய்து கொண்ட நாளான அதே நவம்பர் 28 ல், நான் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னை அர்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன்" என்று அறிவித்தார்.
சாப்பிட ஒரே ஒரு ரொட்டி மட்டுமே.., 7 வயதில் காணாமல் போன சிறுவன் 30 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் சேர்ந்த நெகிழ்ச்சி
அதன்படி நேற்று நவம்பர் 28 -ம் திகதி அன்று, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் ரோகித்தை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம், தெய்வீக திருமணம் என அறிவிக்கப்பட்டு நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், வருங்காலத்தில் இருவரும் சேர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |