அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரம்.., உடனே கொந்தளித்த ராகுல் காந்தி
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹொட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கும்படியான வீடியோ பரவிய நிலையில் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அன்னபூர்ணா உரிமையாளர்
கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் கலந்து கொண்டார்.
அப்போது அவர், "காரத்திற்கும் இனிப்பிற்கும் வெவ்வேறு ஜிஎஸ்டி உள்ளது. இனிப்பிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி, காரத்திற்கு 12 சதவீத வரி இருக்கிறது.
பன்னுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை. ஆனால், அதில் க்ரீம் வைத்தால் 18 சதவீத ஜிஎஸ்டி வரி ஆகிவிடுகிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது" என்றார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "ஹொட்டல் உரிமையாளர் தன்னுடைய பிரச்சனையை ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். அதில் தவறில்லை. அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார்.
ஒவ்வொரு உணவுக்கும் எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. உங்கள் கோரிக்கைபரிசீலனை செய்யப்படும்" என்றார்.
இதையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமானிடம் அன்னபூர்ணா ஹொட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் மன்னிப்பு கோரியதாக கூறப்படும் வீடியோ பரவி வருகிறது.
ராகுல் காந்தி கண்டனம்
இந்நிலையில், அன்னபூர்ணா ஹொட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட விவகாரத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "கோவை அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வியாபாரி ஜிஎஸ்டி வரியை எளிமையாக்குமாறு கோரிக்கை வைத்தால், ஒரு மக்கள் சேவை செய்பவர் ஆணவத்துடன் அவரை முற்றிலும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.
இதுவே அவரின் கோடீஸ்வர நண்பர்கள் விதிகளை வளைந்து கொடுக்க கூறினாலோ, சட்டங்களை மாற்ற கூறினாலோ, தேசிய சொத்துக்களை பெற முற்பட்டாலோ பிரதமர் மோடி அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |