பெண்கள் சுய தொழில் தொடங்க கடன் வழங்கும் இந்திய அரசு.., பணம் மற்றும் விண்னப்பிக்கும் விவரங்கள்
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் இந்திய அரசு அறிவித்த அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை பற்றி பார்க்கலாம்.
பெண்களுக்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்தவகையில் பெண்கள் சுய தொழில் புரிவதற்கும், அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பு அளிப்பதற்கும் இந்திய அரசு கடனை வழங்குகிறது.
அன்னபூர்ணா யோஜனா திட்டம் (Annapurna scheme)
தற்போதைய காலத்தில் சுயதொழில் செய்துவரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இன்னும் அந்த எண்ணிக்கையை அதிகரிக்க இந்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
நிதிவசதி இல்லாத காரணத்தினால் பெண்களுக்கு சுயதொழில் தொடங்க தடைபடும் காரணத்தினால் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை இந்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் உணவு தொழிலில் ஈடுபடும் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ.50,000 கடன் அளிக்கப்படுகிறது.
இதன்படி, பெண்கள் சமையலுக்கு தேவையான பாத்திரங்கள், சமையல் கருவிகள், உணவுப் பொருட்கள், உணவு மேஜை ஆகியவற்றை வாங்கிக்கொள்ளலாம்.
இந்த கடன் தொகையை 36 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம். குறிப்பாக முதல் மாத தவணையை செலுத்த தேவையில்லை. சந்தை நிலவரப்படி வட்டிவிகிதம் (Interest rate) மட்டும் மாறுபடும்.
இந்த கடனை பெற விரும்புபவர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) மூலம் பெற்றுக்கொள்ளலாம். மேலும், கூடுதல் தகவல்களுக்கு SBI வங்கி கிளைகளை அணுகலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |