புலம்பெயர் நபரால் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான பிரித்தானிய சிறுமியின் பெயர் வெளியானது
பிரான்சில் புலம்பெயர் நபரால் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான 3 வயது பிரித்தானிய சிறுமியின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவரது பெயர் Ettie Turner
பிரான்சில் Annecy பகுதியில் கடந்த வாரம் வியாழக்கிழமை பகல் புலம்பெயர் நபர் ஒருவரால் நான்கு சிறார்கள் மற்றும் இரு முதியவர்கள் கத்தியால் தாக்கப்பட்டனர். இதில் அந்த நான்கு சிறார்களில் ஒருவர் பிரித்தானியர் என தகவல் வெளியான நிலையில், தற்போது அவரது பெயர் Ettie Turner என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Credit: skynews
கத்திக்குத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எஞ்சிய சிறுவர்களில் ஒருவர் பிறந்து 22 மாதமேயான நெதர்லாந்து சிறுமி எனவும், இருவர் பிரான்ஸ் நாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது சிறுமி Ettie Turner தமது குடும்பத்தினருடன் பிரான்சில் விடுமுறையை கழித்து வந்தார் என்றே கூறப்படுகிறது. தற்போது சிறுமி Ettie Turner சிறார்களுக்கான மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையில் உள்ளார், ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் சமீபத்தில் நலம் விசாரிக்கவும் சென்றுள்ளார்.
ஆபத்து கட்டத்தில் அவர்கள் இல்லை
தாக்குதல் சம்பவத்தில் இலக்கான நான்கு சிறார்களும் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர் எனவும், ஆபத்து கட்டத்தில் அவர்கள் இல்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான இரு முதியவர்களில் ஒருவர் 78 வயது போர்த்துகல் நபர் எனவும், இன்னொருவர் 72 வயது பிரான்ஸ் நாட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.
Shutterstock
தாக்குதல் நடத்தியவர் தப்பிச் செல்லாமல் தடுக்க முயன்ற போர்த்துகீசிய நபர் கத்தியால் குத்தப்பட்டார் என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.