மனைவியை பிரிந்த சூழலில் முன்னாள் காதலிக்கு பிறந்த குழந்தை..ஊகத்தினால் ஊசலாடும் இங்கிலாந்து கால்பந்து வீரரின் வாழ்க்கை
இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரமான கைல் வாக்கர், தனது மனைவியால் வீட்டில் நுழைய அனுமதிக்கப்படவில்லை தெரிய வந்துள்ளது.
மான்செஸ்டர் நட்சத்திரம்
மான்செஸ்டர் சிட்டி கிளப் அணியில் விளையாடி வரும் இங்கிலாந்து defender வீரர் கைல் வாக்கர் (Kyle Walker). இவரது மனைவி Annie Kilner மற்றும் மூன்று பிள்ளைகள் ரியான் வாக்கர், ரோமன் வாக்கர், ரெய்ன் வாக்கர் ஆவர்.
கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால் இருவரும் பிரிந்து வாழ்கிறார். இதற்கு காரணம் மொடலான Lauryn goodman உடனான உறவை மீண்டும் கைல் வாக்கர் புதுப்பிக்க முயற்சித்தது தான் என் பரவிய வதந்தி தான் என்று கூறப்படுகிறது.

பிரித்தானியாவை சூழும் 14 ஆண்டுகள் இல்லாத கடும் குளிர், பனிப்பொழிவு: -15C வெப்ப நிலைக்கு செல்ல வாய்ப்பு
இதன் காரணமாகவே 12 ஆண்டுகால உறவில் இருந்து Annie தனது கணவரை பிரிந்துள்ளார். Lauryn-னும் Kyle-வும் உறவில் இருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டில் பிரிய முடிவெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து கர்ப்பமாக இருந்த Lauryn, 2020 ஆம் ஆண்டில் ஆண் குழந்தையை பெற்றுடுத்தார். அதற்கு கைரோ வாக்கர் (Kairo Walker) என்று பெயர் சூட்டப்பட்டது.
உறுதி அளித்த Kyle Walker
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் Lauryn-ஐ ஒருபோதும் இனி பார்க்க மாட்டேன் என Annie-யிடம் உறுதி அளித்த Kyle walker, மகன் கைரோவை சந்தித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் Lauryn இரண்டாவது குழந்தைக்கு தாயானார். இந்த முறை அவர் பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், அதன் தந்தை யார் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.
ஆனால் KW என்பதை குறிக்கும் வகையில் அவர் பெயர் வைத்துள்ளதால், அது Kyle Walker-யின் குழந்தையாக இருக்கலாம் என்று கிசு கிசுக்கப்பட்டது. இதுவே Annie மற்றும் Kyle இடையே புகைச்சலை கிளப்ப காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
தடை விதித்த Annie
ஆனாலும் Lauryn குழந்தையின் தந்தை மற்றொரு கால்பந்து வீரர் என்பதை மறுக்கிறார். இதற்கிடையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, 2.4 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள வீட்டினுள் நுழைய Kyle Walker-க்கு Annie தடை விதித்ததாக தெரிய வந்துள்ளது.
(Image: JAMES RUDLAND/ OK! MAGAZINE)
மனைவியை பிரிந்த பின்னர் Kyle Walker மான்செஸ்டர் நகர மையத்தில் உள்ள Penthouse குடியிருப்பில் தங்கியிருந்ததாக கருதப்படுகிறது.
அவர் தனது மூன்று பிள்ளைகளை பார்ப்பதற்கும், ஒருநாள் பயணத்திற்கு அழைத்துச் செல்வதற்கும் எப்போதாவது மட்டுமே வருவதாக தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |