ஐபோன் 13 மற்றும் 13 மினி அறிமுகம்: புதிய அம்சங்கள் என்ன?
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரு போன்களும் ஒரே மாதிரியான வடிவமைப்பை கொண்டுள்ளது.
ஐபோன் 13 போன்களில் சூப்பர் ரெடினா எச்டிஆர் டிஸ்ப்ளே செராமிக் ஷீல்ட் பாதுகாப்புடன் வருகிறது. மேலும், இளஞ்சிவப்பு, நீலம், கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் சந்தைப்படுத்தப்பட உள்ளன.
ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஏ15 பயோனிக் பிராசஸர் கொண்டிருப்பதால் சிறந்த இயக்க வேகம் மற்றும் பேட்டரி திறனுக்கு ஆப்பிள் உத்தரவாதம் அளிக்கிறது.
இந்த பிராசஸரில் 16 கோர் நியூரல் என்ஜின் உள்ளது. புதிய பிராசஸருடன் ஐபோன் 13 மாடலில் 12 எம்பி வைடு கமெரா சென்சார் உள்ளது. ஐபோன் 13 மாடலில் உள்ள சினிமேடிக் வீடியோ அம்சம் சினிமா தர வீடியோக்களை படமாக்க வழி செய்கிறது.
ஆப்பிள் நிகழ்வில் இந்த மோட் கொண்டு படமாக்கப்பட்ட வீடியோவும் வெளியிடப்பட்டது. 2021 ஐபோன் மாடலில் 5ஜி தொழில்நுட்பம் முன்பை விட அதிக பேண்ட்களை சப்போர்ட் செய்கிறது. இதற்கென புது ஐபோனில் பிரத்யேக உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதில் உள்ள பேட்டரி முந்தைய மாடலை விட 2.5 மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்குகிறது. ஐபோன் 13 மினி பேட்டரி முந்தைய ஐபோன் 12 மினி மாடலை விட 1.5 மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்குகிறது.
புதிய ஐபோன் சீரிசில் மேம்பட்ட மேக்சேப் அம்சம் உள்ளது. ஐபோன் 13 மினி 128 ஜிபி விலை 699 டொலர்கள் என்றும் ஐபோன் 13 விலை 799 டொலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.