ஆனந்த் அம்பானியின் திருமணத்தால் நிகழவிருக்கும் பல திருமணங்கள்.., சிறப்பான அறிவிப்பு
ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம் செய்யவிருப்பதாக ரிலையன்ஸ் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்த் அம்பானி திருமணம்
Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி நடைபெற உள்ளது.
இவர்களின் திருமண முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சியானது ஆடம்பரமாக நடைபெற்றது. முதல் நிகழ்ச்சி குஜராத்திலும், இரண்டாவது நிகழ்ச்சி ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் நடைபெற்றது.
ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம்
இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம் செய்யவிருப்பதாக ரிலையன்ஸ் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி வரும் ஜூலை மாதம் 2 -ம் திகதி மாலை 4:30 மணிக்கு மகாராஷ்டிராவில் உள்ள பல்கார் மாவட்டத்தில் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியும், அவரது மனைவி நீடா அம்பானியும் குடும்பத்தினருடன் கலந்துகொள்வார்கள்.
மேலும், விருப்பமுள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை தரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |