மகளிர் உரிமைத் தொகை முதல் தோழி விடுதி வரை- பெண்களுக்கான தமிழக பட்ஜெட் அறிவிப்புகள்
தமிழக சட்டசபையில் 2025-26ஆம் ஆண்டிற்க்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில், பட்ஜெட் உரையில் மகளிர் உரிமைத் தொகை முதல் தோழி விடுதி வரை பெண்களுக்கான ஒதுக்கீடு பட்ஜெட் அறிவிப்புகளை கூறினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது..,
மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம் திட்டங்கள் தொடரும்.
மகளிர் உரிமை தொகை பெறாத தகுதி பெற்ற மற்ற மகளிருக்கும் மகளிர் உரிமைத்தொகை பெற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.13,807 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
புதுமை பெண் திட்டத்திற்காக ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் மகளிர் விடியல் பயணத்திற்கு ரூ.3600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் 10 இடங்களில் ரூ.800 கோடியில் பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி அமைக்கப்படும்.
சென்னை, கோவை, மதுரையில் நவீன வசதிகளுடன் மாணவிகள் விடுதிகள் அமைக்கப்படும்.
விடுதியில் தலா 1000 மாணவியர் தங்கும் வகையில் ரூ.775 கோடியில் விடுதிகள் அமைக்கப்படும்.
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.37,000 கோடி வங்கிக் கடன் வழங்கப்படும்.
3ஆம் பாலினத்தவருக்கும் ரூ.1000 உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும், 2000 ஏக்கரில் சென்னை அருகில் உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம் உருவாக்கப்படும் என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |