பதற்றத்தை குறைக்க பிரான்ஸ் முன்வைத்த திட்டத்தை நிராகரித்தார் இஸ்ரேல் அமைச்சர்
இஸ்ரேல் லெபனான் நாடுகளுக்கிடையில் நிலைவும் பதற்றத்தைக் குறைக்க பிரான்ஸ் முன்வைத்த திட்டத்தை நிராகரிப்பதாக இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் முன்வைத்த திட்டம்
லெபனான் இஸ்ரேல் எல்லையில் நீண்ட நாட்களாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்னுவேல் மேக்ரான் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் திட்டம் ஒன்றை முன்வைத்தார். லெபனானுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கும் பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்கும் ஒரு திட்டத்தை முன்வைக்க முயன்றது.
நிராகரித்த இஸ்ரேல் அமைச்சர்
ஆனால், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரான Yoav Gallant, பிரான்சின் திட்டத்தை நிராகரித்துள்ளார்.
நாங்கள் எங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக ஒரு நியாயமான போரை நடத்துகிறோம். ஆனால், பிரான்ஸ் இஸ்ரேலுக்கு எதிரான கொள்கைகளை கொண்டுள்ளது என்று கூறிய Gallant, பிரான்ஸ் இவ்வாறு செய்வதன் மூலம், இஸ்ரேலிய குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய அட்டூழியங்களை அலட்சியம் செய்கிறது. ஆகவே பிரான்ஸ் முன்வைத்த முத்தரப்பு திட்டத்தில் இஸ்ரேல் பங்கேற்காது என்று வெள்ளிக்கிழமையன்று கூறியுள்ளார்.
விடயம் என்னவென்றால், இஸ்ரேல் அமைச்சர்கள் சில நேரங்களில் ஒரே விடயம் தொடர்பில் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலையே, இஸ்ரேலிய ஊடகங்கள் பல, பிரான்சுக்கு எதிரான Gallantஇன் அறிக்கையை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் நிராகரித்துள்ளதாகவும், அது தவறானதும் பொருத்தமற்றதும் ஆகும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |