பிரான்ஸ் செல்லும் பிரித்தானியர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு திடீர் அறிவிப்பு
பிரித்தானிய ஊடகங்கள் சமீபத்தில் வெளியிட்ட ஒரு செய்தி, பிரான்ஸ் செல்லும் பிரித்தானியர்களுக்கு திடீர் குழப்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
அது என்னவென்றால், ஸ்பெயினுக்கு சுற்றுலா வரும் பிரித்தானியர்கள், தங்களிடம் ஒரு குறைந்தபட்சத் தொகையை வைத்திருக்கவேண்டும் என ஸ்பெயின் அதிகாரிகள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவித்தது.
உண்மையில், அது புதிய செய்தியே அல்ல. அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் ஸ்பெயின் செல்லும்போது தங்களிடம் குறைந்தபட்சத் தொகை ஒன்றை வைத்திருக்கவேண்டும், ஸ்பெயினுக்கு மட்டுமல்ல, பிரான்சுக்கு செல்பவர்களுக்கும் இந்த விதி பொருந்தும்!
இந்த விதி யாருக்கு?
இந்த விதி சுற்றுலாப்பயணிகள், மற்றும் பிரான்சில் தங்கள் இரண்டாவது வீட்டைக் கொண்டிருக்கும் பிரித்தானியர்கள், அதாவது, பிரான்சில் வாழாதவர்கள், மற்றும் குடியிருப்பு அனுமதி அட்டை அல்லது விசா இல்லாதவர்களுக்கானது.
நீங்கள் குடியிருப்பு அனுமதி அட்டை அல்லது விசாவுடன் பிரான்சுக்குள் நுழைந்தால், உங்களிடம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு பணம் இருக்கிறதா என்பதற்கான ஆதாரம் குறித்த கேள்வி எழுப்பப்படாது.
நீங்கள் ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒரு சுற்றுலாப்பயணியாக இருக்கும் பட்சத்திலும் உங்களிடம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு பணம் இருக்கிறதா என்பதற்கான ஆதாரம் குறித்த கேள்வி எழுப்பப்படாது.
ஆனால், பிரன்சுக்குள் நுழையும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத சுற்றுலாப்பயணிகளிடம் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் நீங்கள் பிரான்சில் தங்குவதற்காக செய்துள்ள ஏற்பாடுகள், நீங்கள் திரும்பிச் செல்வதற்காக எடுத்துள்ள பயணச்சீட்டு, நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்பதற்கான ஆதாரங்கள், நீங்கள் பிரான்சில் இருக்கும் காலகட்டத்தில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு பணம் இருக்கிறதா என்பதற்கான ஆதாரம் மற்றும் பாஸ்போர்ட் முதலான ஆவணங்களைக் கேட்பார்கள்.
அதாவது நாட்டுக்குள் நுழையும் சுற்றுலாப்பயணிகள் எல்லாரையும் நிறுத்தி இந்த ஆவணங்கள் அனைத்தையும் அதிகாரிகள் கேட்பார்கள் என்பது இதன் அர்த்தம் அல்ல. அதாவது, இந்த ஆவணங்களை உங்களிடம் கேட்கும்போது, உங்களால் அவற்றைக் கொடுக்க முடியாவிட்டால், நீங்கள் பிரான்சுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டீர்கள் என்பது அதன் பொருள்.
மேலதிக தகவல்களுக்கு... https://www.thelocal.fr/20220727/is-there-really-a-minimum-cash-requirement-for-british-visitors-to-france/