ஆண்டு வருமானம் வெறும் 3 ரூபாய் மட்டுமே.., தாசில்தார் கையெழுத்திட்ட வருவாய் சான்றிதழால் குழப்பம்
விவசாயி ஒருவரின் ஆண்டு வருமானம் வெறும் 3 ரூபாய் மட்டுமே என்று தாசில்தார் வழங்கிய வருவாய் சான்றிதழால் பரபரப்பு நிலவியுள்ளது.
ஆண்டு வருமானம் ரூ.3
இந்திய மாநிலமான மத்தியப்பிரதேசம், சாத்னா மாவட்டத்தின் நயாகான் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராம்ஸ்வரூப் (45). இவருக்கு தாசில்தார் வருவாய் சான்றிதழ் வழங்கியுள்ளார்.
அதில் ஒவ்வொரு மாதமும் 25 பைசா என்ற வருமானத்தின் அடிப்படையில் ஆண்டு வருமானமாக 3 ரூபாய் எனப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும், இந்த சான்றிதழில் சவுரப் திரிவேதி என்ற தாசில்தார் கையெழுத்தும், அவரது அதிகாரப்பூர்வ முத்திரையும் இருந்தது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
இது, எழுத்துப்பிழை என்று அதிகாரிகள் கூறியதோடு விவசாயிக்கு வருமானத்தை அதிகப்படுத்தி புதிய வருமானச் சான்றிதழை வழங்கி உள்ளனர். அதாவது, . ஜூலை 25 ஆம் திகதிக்குள் ஒரு புதிய வருமானச் சான்றிதழ் ராம்ஸ்வரூபுக்கு வழங்கியுள்ளனர்.
आवेदक की स्व-घोषणा के अनुसार आय प्रमाण जारी करने में लिपिकीय त्रुटि हुई थी। जिसे तत्काल सुधार कर (निरस्त कर) नया आय प्रमाण पत्र जारी कर दिया गया है।#JansamparkMP @CMMadhyaPradesh #सतना pic.twitter.com/Q2q9TJiFsQ
— Collector Satna (@Collector_Satna) July 27, 2025
அதில், ஒவ்வொரு மாதமும் 2,500 ரூபாய் வருமானம் என்ற கணக்கீட்டில் ஆண்டு வருமானம் 30,000 ரூபாய் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |