சுவிஸில் துர்க்கை அம்மன் ஆலயத்தில் முதல் முறையாக 1008 சங்குகளால் அபிஷேகம்!
சுவிட்சர்லாந்து நாட்டில் Luzern அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் முதல் முறையாக 1008 சங்குகளால் இன்று(05.04.2023) அன்று மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.
துர்க்கை அம்மன் கோயில்
சுவிஸின் Luzern மாநிலத்தில் உள்ள ரூத் என்னும் இடத்தில் அருள்மிகு துர்க்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது. 1991ஆம் ஆண்டில் Emmenbrucke கிராமத்தில் இருந்த குடிபெயர்ந்த மக்களின் முகாமில், நவராத்திரி விழாவின்போது துர்க்கை அம்மனின் நிழல்வடிவத் திருவுருவம் வைத்து வழிபட ஆரம்பித்தனர்.
சுவிஸில் குடியேறிய தமிழர்களின் தொகை அதிகரித்ததைத் தொடர்ந்து, பக்தர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சைவ சமய வழிபாடுகளும், ஆன்மீக நற்சிந்தனை, கூட்டுப்பிரார்த்தனை என்பனவும் இங்கு நடைபெற்றது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆலய வளாகம் மீள்கட்டுமானம் செய்யப்பட்டு மேலதிக இடவசதிகளோடு நவீனமயப்படுத்தப்பட்டது.
மகாகும்பாபிஷேகம்
இந்த நிலையில் மீண்டும் புதுப்பொலிவுடன் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கணிசமான இளையோர் இறைபணி ஆற்றத் தொடங்கியிருப்பதன் விளைவாகப் பிற மத, மொழி மாணவர்களின் சைவ சமயத் தேடல்களுக்கான களமாகவும் இது திகழ்கின்றது.
அத்துடன் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் முதல் முறையாக 1008 சங்குகளால் அபிஷேகம் இன்று(05.04.2023) அன்று மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.