சுவிஸ் நீதிமன்றம் ஒன்றிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
சில வாரங்களுக்கு முன் சுவிஸ் நீதிமன்றம் ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் குவிந்த அதிகாரிகள்
நேற்று, சூரிச் உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்ததைத் தொடர்ந்து, பொலிஸ் அதிகாரிகளும், தடயவியல் துறையினரும் அங்கு குவிந்தனர்.
உடனடியாக நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, பொலிசாரும் தடயவியல் அதிகாரிகளும் அங்கு சோதனை மேற்கொண்டார்கள்.
சந்தேகத்துக்குரிய பொருட்கள் ஏதாவது கிடைத்ததா என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 24ஆம் திகதியும், இதேபோல உயர்நீதிமன்றத்துக்கு ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
பொலிசார் சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், மிரட்டல் விடுத்ததாக சந்தேகிக்கப்படும் 44 வயது சுவிஸ் நாட்டவர் ஒருவரை பொலிசார் மறுநாள் கைது செய்தார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |