கனடா தரப்பிலிருந்து வெளிநாட்டவர்கள் மீது மீண்டும் ஒரு குற்றச்சாட்டு
கனடா தரப்பிலிருந்து வெளிநாட்டவர்கள் மீது மீண்டும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இம்முறை, வெளிநாட்டு மருத்துவர்கள் மீது...
வெளிநாட்டு மருத்துவர்களால் பாதிப்பு
வெளிநாட்டு மருத்துவர்களால் ஆண்டுதோறும் சுமார் 1,000 கனேடிய மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடா தரப்பிலிருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
2028வாக்கில், கனடாவில் 30,000 குடும்ப நல மருத்துவர்கள் உட்பட, மொத்தம் 44,000 மருத்துவர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என பெடரல் தரவுகள் தெரிவிக்கின்றன.
Ben Nelms/CBC
இப்படி மருத்துவர்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படித்துத் திரும்பும் மருத்துவர்களுக்கு, கனடா மருத்துவமனைகளில் மேல் படிப்பு படிப்பதற்கு இடம் கிடைப்பதில்லையாம். இந்த குறிப்பிட்ட மேற்படிப்பை முடித்தால்தான் அவர்கள் மருத்துவராக பயிற்சி செய்யமுடியும்.
என்ன காரணம்?
அதாவது, சவுதி போன்ற நாடுகளிலிருந்து மருத்துவ மேற்படிப்பு படிக்க வரும் மருத்துவர்களுக்காக, கனடாவில் வெளிநாட்டு விசா பயிற்சியாளர் திட்டம் என்று ஒன்று உள்ளதாம்.
அதன் மூலம் நூற்றுக்கணக்கான கனேடியர் அல்லாதோர் கனேடிய மருத்துவமனைகளில் மேற்படிப்புக்காக வருகிறார்களாம். மருத்துவமனைகளில் இத்தகைய படிப்புக்கான இடம் குறைவான நபர்களுக்கே இருக்கும் என்பதால், அந்த இடத்தை இந்த வெளிநாட்டு மருத்துவர்கள் பிடித்துக்கொள்வதால், கனேடிய மருத்துவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
Ryan Remiorz/Canadian Press
இப்படி சவுதியிலிருந்து மேற்படிப்புக்காக வரும் மருத்துவர்கள் படிப்பு முடிந்ததும், கண்டிப்பாக தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப அந்நாடுகள் வற்புறுத்துமாம்.
ஆக, கனடாவில் அத்தனை பேர் மருத்துவ மேற்படிப்பு படிக்கவந்தும், அவர்கள் படிப்பு முடிந்ததும் தங்கள் நாடுகளுக்கே திரும்பிப் போய்விடுவதால், கனடாவில் மருத்துவர் பற்றாக்குறை தொடர்கிறது என்கிறார்கள் இந்த துறை சார் அமைப்பு ஒன்றைச் சார்ந்தவர்கள்.
ஆக, இந்த வெளிநாட்டு விசா பயிற்சியாளர் திட்டத்தை நீக்கவேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |