ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கிடையே மீண்டும் ஒரு பனிப்போர்?: முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தி
ரஷ்யாவும் நேட்டோ நாடுகளும் மீண்டும் ஒரு பனிப்போரைத் துவக்கியுள்ளதாக வரலாற்றியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
சமீப காலமாக, சொல்லப்போனால், உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யாவும், நேட்டோ நாடுகள் சிலவும், குறிப்பாக, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் மீது கவனம் செலுத்தி வருகின்றன.
அதாவது, உக்ரைன் போர் விடயத்தில், ஆப்பிரிக்க நாடுகளின் ஆதரவைப் பெற ரஷ்யாவும், பிரான்சும், அமெரிக்காவும் முயன்று வருகின்றன.
ரஷ்ய வெளியுறவு அமைச்சரான லாவ்ரோவ் (Sergey Lavrov), பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஆகியோர் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளை தற்போது சந்தித்து வருகிறார்கள். சென்ற வாரம், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க ஏஜன்சியின் தலைவரான சமந்தா பவர் கென்யா மற்றும் சோமாலியா நாடுகளுக்குச் சென்றிருந்தார்.
Just as Ugandan President Museveni cites his struggle against colonialism to fend off criticism of his brutal rule today, so he cites the Soviet Union's support for the fight against colonialism to justify ignoring Russian war crimes in Ukraine today. https://t.co/P9A6SvIDNd
— Kenneth Roth (@KenRoth) July 27, 2022
அத்துடன், ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்க தூதரான லிண்டா தாமஸ் கிரீன்பீல்ட், அடுத்த வாரம் கானா மற்றும் உகாண்டா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்ல இருக்கிறார். ஆக, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் ஆப்பிரிக்காவைக் குறிவைத்திருப்பதை நன்கு உணரலாம்.
இது ஆப்பிரிக்கா மீது தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக அந்நாட்டில் எதிரி நாடுகள் துவங்கியுள்ள புதிய ஒரு பனிப்போர் எனலாம் என்கிறார் Democracy Works என்னும் அமைப்பின் தலைவரான William Gumede.
ஆப்பிரிக்காவுக்குச் சென்றுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சரான லாவ்ரோவ், உணவுப்பொருட்களின் விலை உயர்வதற்கு மேற்கத்திய நாடுகள் காரணம் என்று கூறி, அந்நாடுகளை வில்லனாக காட்ட முயல்கிறார்.
மேற்கத்திய நாடுகளின் தலைவர்களோ உணவை ஆயுதமாக பயன்படுத்தி ரஷ்யா போர் ஒன்றை நடத்திவருவதாக ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளார்கள்.
ஆனால், ரஷ்யாவின் திட்டம் நன்கு வேலை செய்வதாக தோன்றுகிறது. காரணம், ஐக்கிய நாடுகள் அமைப்பில் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது கண்டனம் தெரிவிக்கும் வாக்கெடுப்பில் 28 ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமே தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 25 ஆப்பிரிக்க நாடுகள் ஒன்றில் தாங்கள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருப்பதாக வாக்களித்துள்ளன அல்லது வாக்களிக்கவேயில்லை!
இதற்கிடையில், இதுவரை அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த உகாண்டா நாட்டுக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சரான லாவ்ரோவ் சென்றபோது, அவருக்கு உகாண்டா ஜனாதிபதியான Yoweri Museveni சிறப்பான வரவேற்பளித்தார். அதுவரை எல்லா இடங்களிலும் முகத்தில் மாஸ்குடனே நடமாடிக்கொண்டிருந்த Yoweri Museveni, லாவ்ரோவ்வை வரவேற்கும்போது மட்டும் மாஸ்க் அணியாமல், அவர் புறப்பட்டுச் சென்ற பிறகு மாஸ்க் அணிந்துகொண்ட விடயம், அவர் முகமலர்ச்சியுடன் வரவேற்பளிப்பதை லாவ்ரோவ் காணவேண்டும் என்ற நோக்கிலேயே செய்யப்படதாக உலக அரங்கில் பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் எதிரெதிர் நாடுகள் ஆப்பிரிக்காவை குறிவைத்து அதன் ஆதரவை நாடத்துவங்கியுள்ள விடயம் உலக அரசியலில் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.