இலங்கைக்கு மற்றுமொரு ஆபத்து! 5 மரணங்கள் பதிவாகின
இலங்கையின் - இரத்தினப்புரி மாவட்டத்தில் விவசாயம் உள்ளிட்ட நிலத்துடன் தொடர்புடைய தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்ட பலரும் எலிக்காய்ச்சல் அச்சத்திலேயே தமது அன்றாட கடமைகளில் ஈடுபடுகின்றனர்.
13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களையும், ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு பாதிப்பினையும் கொவிட்-19 இலங்கையில் ஏற்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் எலிக்காய்யச்சல் இலங்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. எனினும் கொவிட்-19 தொற்றின் வீரியம், எலிக்காய்ச்சல் குறித்த அவதானத்தை தடுத்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் மாவட்டத்தில் 19 சுகாதாரப் பிரிவுகளில் 344 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 5 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதுத் தொடர்பிலான விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் காணொளியில் காணலாம்.