நேபாள வெள்ளப்பெருக்கில் அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்ட அவுஸ்திரேலியர்கள்
Another four australians found in nepal: நேபாள வெள்ளப்பெருக்கில் காணாமல்போன மேலும் நான்கு அவுஸ்திரேலியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில், காணாமல்போன மேலும் நான்கு அவுஸ்திரேலியர்கள் மீட்கப்பட்டதன் மூலம் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
38 அவுஸ்திரேலியர்கள் மாயம்
சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்த 4,850-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 38 பேர் அவுஸ்திரேலியர்கள் என்று கூறப்படுகிறது.
என்றாலும், காரா என்ற பெண் முதல் நபராக மீட்கப்பட, செவ்வாய்க்கிழமை அன்று மற்றொருவர் மீட்கப்பட்டார்.
இந்த நிலையில், புதன்கிழமையன்று மேலும் 4 பேர் அதிசயமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த எண்ணிக்கை 6
இதன்மூலம் இதுவரை மீட்கப்பட்ட அவுஸ்திரேலியர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. எனினும், இன்னும் பலரைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
இந்த செய்தியை வரவேற்ற பிரதமர் அந்தோணி அல்பனீஸ், "இந்தத் துயரங்களுக்கு மத்தியிலும், சில நல்ல செய்திகளைக் காண்கிறோம். இன்று மேலும் ஐந்து அவுஸ்திரேலியர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் தொடர்ந்து நல்ல செய்திகளை எதிர்பார்க்கிறோம்; அத்துடன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |