பிரான்ஸ் தலைநகரில் இன்னொரு பொதுமுடக்கமா? அரசு அறிவிப்புக்கு மக்கள் ரியாக்ஷன்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இந்த ஆண்டு ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், நகரில், ரயில் நிலையங்கள் முதலான பல்வேறு இடங்களில் அரசின் அறிவிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஜூலை மாதம் 26ஆம் திகதி முதல், ஆகத்து மாதம் 11ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகளும், ஆகத்து மாதம் 28ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி வரை பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன.
Photograph: Michel Euler/AP
இந்நிலையில், இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் காலகட்டத்தில், மக்கள் அலுவலகங்களுக்குச் செல்லாமல், வீடுகளிலிருந்தவண்ணம் வேலை செய்யுமாறு அறிவுறுத்துகிறது.
மக்கள் ரியாக்ஷன்
அரசின் அறிவிப்பைக் கேட்ட பொதுமக்கள் இது என்ன விந்தையான அறிவிப்பு என வியக்கிறார்கள். அகதிகள் அமைப்பு ஒன்றில் பணியாற்றும் ஜூலி என்னும் இளம்பெண் (Julie, 24), இது மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதுபோல் உள்ளது என்கிறார்.
Photograph: Christophe Ena/AP
இது எப்படியிருக்கிறது என்றால், பாரீஸில் வாழ்பவர்களே, பணத்தை எல்லாம் நாங்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்காக செலவிடப்போகிறோம், நீங்கள் வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்று கூறுவதுபோல் இருக்கிறது என்கிறார் ஜூலி.
இதற்கிடையில், ஒருபக்கம் பாரீஸ்வாசிகள் ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட்களை வாங்கிவரும் நிலையில், மற்றொரு பக்கமோ, ஒரு கூட்டம் மக்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் நிகழவிருக்கும் குழப்பங்களைத் தவிப்பதற்காக வேறு எங்காவது சென்றுவிடவேண்டும் என திட்டமிட்டுவருகிறார்கள்.
Photograph: Christophe Ena/AP
பாரீஸ் நகர மேயரான Anne Hidalgo கூறும்போது, பிரான்ஸ் தலைநகரில் ஒரு அருமையான விடயம் நிகழப்போகிறது, இந்த நேரத்தில் வேறெங்கும் செல்லாதீர்கள், அப்படிச் செல்வது முட்டாள்தனம் என்கிறார்.
இதற்கிடையில், பிரான்ஸ் பிரம்மாண்டமாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முதலானோர் பெருமையாக பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், சில பிரச்சினைகளும் உள்ளன.
Photograph: Stéphanie Lecocq/Reuters
குறிப்பாக, நீச்சல் போட்டிகள் Seine நதியில் நடைபெற உள்ளன. ஆனால், நதி நீர், நீச்சல் போட்டிகளை நடத்த தகுதியானதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Photograph: Berzane Nasser/Abaca/Rex/Shutterstock
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |