கனடாவில் மீண்டும் ஒரு இனவெறுப்புச் சம்பவம்: பாதிக்கப்பட்ட வெளிநாட்டு இளம்பெண்கள் இருவர்
கால்கரியில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த பதின்மவயது வெளிநாட்டுப் பெண்கள் இருவர் இனரீதியாக தாக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களை அவமதித்த பெண் ஒருவரை பொலிசார் தேடிவருகிறார்கள்.
கனடாவின் கால்கரி நகரில், பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு பதின்ம வயதுப் பெண்கள் இருவர் இனரீதியாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டவர்களான 13 வயதுடைய பெண்கள் இருவர் பேருந்து ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென கனேடிய பெண் ஒருவர் அவர்களை இனரீதியாக மோசமாக விமர்சித்துள்ளார்.
Courtesy of CPS
எதிர்பாராமல் திடீரென ஒருவர் தங்களை இனரீதியாக விமர்சித்ததால் அந்த பெண்கள் இருவரும் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்துள்ளனர்.
அந்த பெண்களை இனரீதியாக தாக்கிய பெண்ணை பொலிசார் தீவிரமாகத் தேடிவரும் நிலையில், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது, கால்கரியில் வாழும் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பாக உணரும் உரிமை உள்ளது என்று கூறியுள்ள பொலிசார், இந்த சம்பவத்தைக் கண்ணால் கண்ட யாராவது இருந்தால் தங்களுக்கு தகவலளிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Courtesy of CPS