இளவரசர் ஹரிக்கு மற்றொரு அவமதிப்பு; சுயசரிதையால் இழந்த உயரிய கௌரவம்
பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்கப் பெண்ணான மேகனை திருமணம் செய்த நாளிலிருந்தே தொடர்ச்சியாக பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.
ராஜ குடும்பத்துடன் ஒத்துப்போகத் தெரியாமல், எல்லோருடனும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு, தன் கணவனையும் அழைத்துக்கொண்டு ராஜ அரண்மனையை விட்டும், பிரித்தானியாவை விட்டும் வெளியேறிய மேகனால், தொடர்ந்து, ராஜ குடும்பத்துக்கு தலைவலி உருவாகிக்கொண்டே இருக்கிறது. குடும்பத்தைப் பிரிந்து, தான் ஒரு இளவரசர் என்பதை மறந்து மனைவியுடன் சேர்ந்து ஏதேதோ செய்துகொண்டிருக்கிறார் ஹரி.
அவ்வகையில், சுய சரிதை எழுதுகிறேன் பேர்வழி என ஹரி எழுதிய ‘ஸ்பேர்’ என்னும் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருந்த சில விடயங்கள், தொடர்ந்து அவருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்திவருகின்றன,
ஆப்கானிஸ்தான் குறித்து பெருமையடித்துக்கொண்ட ஹரி
2005ஆம் ஆண்டு ராணுவப் பயிற்சிப் பள்ளியில் இணைந்த ஹரி, பயிற்சிக்குப் பின் சில ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது தான் சில ஆப்கன் வீரர்களைக் கொன்றதாக தனது ஸ்பேர் புத்தகத்தில் ஹரி பெருமையடித்துக்கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Credit: AFP
சுயசரிதையால் இளவரசர் ஹரிக்கு மற்றொரு அவமதிப்பு
குறிப்பாக, தான் ஆப்கன் வீரர்களைக் கொன்றது குறித்து எழுதுவதற்கு ஹரி பயன்படுத்திய வார்த்தைகள்தான் சர்ச்சைக்குக் காரணமாக அமைந்தன.
உண்மையில், போர் என்பது ஒரு ராணுவ வீரர் தனித்து செய்யும் சாதனை அல்ல. ஒரு ஒரு குழுவாக இணைந்து, தலைமையின் கட்டளைக்கு பணிந்து செய்யும் கடமை. போர்க்களத்தில் தான் கொன்ற எதிரிகளைக் குறித்து தனிநபராக யாரும் பெருமையடித்துக்கொள்ளக்கூடாது.
Credit: PA:Press Association
ஆனால், ஹரியோ, தான் எத்தனை பேரைக் கொன்றேன் என்பதைக் குறித்து பெருமையடித்துகொண்டதுடன், மனிதர்களை மனிதர்களாக மதிக்காமல் பேசியிருந்தார்.
அதாவது, நான் 25 பேரைக் கொன்றேன், அவர்களை மனிதர்களாக என்னால் கருதமுடியாது. அவர்கள் சதுரங்க விளையாட்டின்போது சதுரங்கப் பலகையில் வைக்கப்பட்ட காய்களைப் போன்றவர்கள்.
அவர்களை நான் அகற்றினேன், அவர்கள் கெட்டவர்கள், அவர்கள் நல்லவர்களைக் கொல்லும் முன், அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று கூறியிருந்தார் ஹரி.
சுயசரிதையால் இழந்த கௌரவம்
ஆப்கன் போர் குறித்த ஹரியின் வார்த்தைகள் அவருக்கு அவமதிப்பைக் கொண்டுவந்துள்ளன. ஆம், ராணுவ அகாடமியில் படித்த குறிப்பிடத்தக்க ராணுவ வீரர்கள் என்னும் புத்தகத்தில் (Sandhurst’s guide to its most notable alumni) ஹரியின் பெயர் இடம்பெறவில்லை.
Credit: AP
அந்த புத்தகத்தில் பெயர் இடம்பெறுவது ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் பெரும் கௌரவம் ஆகும். வேறு விதத்தில் கூறினால், துரோகிகள் இடம்பெற்றுள்ள புறக்கணிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார் ஹரி எனலாம்.
இது குறித்து பேசிய முன்னாள் ராணுவ தளபதியான Richard Kemp, ஹரி ஏன் அந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது என்கிறார். ஹரி தனது சுயசரிதைப் புத்தகத்தில் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார், அதாவது, எதிரிகளை மனிதர்களாகப் பார்க்கக்கூடாது, அதைவிட குறைந்த நிலையில் வைத்தே பார்க்கவேண்டும் என ராணுவம் தனக்குக் கற்றுக்கொடுத்ததாக ஹரி குறிப்பிட்டிருந்தார். ஆனால், ராணுவம் அப்படிக் கற்றுக்கொடுப்பதில்லை என்கிறார் Richard Kemp.
Credit: Getty - Contributor
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |