பிரித்தானிய மக்களை கவலையில் ஆழ்த்தும் இன்னொரு தகவல்... 38 பேர்களுக்கு உறுதி
பிரித்தானியாவில் புதிய உருமாற்றம் பெற்ற இன்னொரு கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை 38 பேர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள இந்த புதிய தொற்றானது நைஜீரியாவில் உருமாற்றம் கண்டதாக தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, தென் ஆபிரிக்கா மற்றும் பிரேசில் வகை போன்று, இந்த புதிய உருமாற்றம் கண்ட நைஜீரிய கொரோனா தொற்றும் தடுப்பூசிகளை செயலிழக்க செய்யும் என்றே கூறப்படுகிறது.
பிரிஸ்டல் பகுதியில் மட்டும் 36 பேர்களுக்கு இந்த நைஜீரிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இதன் வீரியம் தொடர்பில் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், உலகளவில் மொத்தம் 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த உருமாற்றம் கண்ட நைஜீரிய தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக எடின்பர்க் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
புதிய உருமாற்றம் கண்ட நைஜீரிய தொற்றானது கடந்த டிசம்பர் மாதமே பிரித்தானியாவில் கண்டறியப்பட்டதாகவும், ஆனால் பிப்ரவரி மாதம் மட்டுமே இது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, கனேடிய சுகாதார அதிகாரிகள் கடந்த வாரம் இந்த உருமாற்றம் கண்ட புதிய கொரோனா தொற்றை முதலில் கண்டறிந்து, இது நைஜீரியா பயணத்துடன் தொடர்புடையது என்று கூறியிருந்தனர்.