நடு ரோட்டில் கோமாளித்தனம் செய்த இளவரசர் ஹரியின் மனைவி மேகன்: ராஜ குடும்பத்துக்கு மற்றொரு தலைகுனிவு
பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன், ராஜ குடும்பத்துக்கு எப்படியெல்லாம் தலைகுனிவை ஏற்படுத்த முடியுமோ, அத்தனையும் செய்துவருகிறார்.
ராஜ குடும்பத்துக்கு சற்றும் பொருந்தாத, ஒரு அமெரிக்கப் பெண்ணான, ஒரு நடிகையான, விவாகரத்து பெற்ற பெண்ணான மேகனை இளவரசர் ஹரி ராஜ குடும்பத்துக்குள் கொண்டு வந்தபோதே, அல்லது கொண்டு வரும் முன்னரே, அதற்கு ராஜ குடும்பத்துக்குள் எதிர்ப்பு உருவானது.
அப்படி எதிர்த்தவர்கள் அப்போது விமர்சனத்துக்குள்ளான நிலையில், தற்போது அவர்கள் எதிர்த்தது சரிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து நடந்துகொள்கிறார் மேகன்.
ராஜ குடும்பத்தை விட்டு இளவரசர் ஹரியைப் பிரித்தாயிற்று, ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியாயிற்று, அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் உலகமே வேடிக்கை பார்க்க, ராஜ குடும்ப மானத்தை நார் நாராக கிளித்து தொங்க விட்டாயிற்று, இப்போது நடு ரோட்டில் கோமாளித்தனம் செய்யும் அளவுக்கு இறங்கியிருக்கிறார் மேகன்.
லாஸ் ஏஞ்சல்சில் நடைபாதைக் கடைகள் வைத்திருப்பவர்கள் முன் பாட்டுப்பாடி, நடனம் ஆடி, அவர் செய்த கோமாளித்தனத்தைப் பார்த்து, கடைக்காரர்கள் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் வாய்பிளந்தார்கள்.
கோணங்கித்தனமாக கடைக்காரர்களிடம் இருந்து உணவு மாதிரிகளை வாங்கி அணில் கொறிப்பது போல் இரு கைகளாலும் கொறித்துக்கொண்டு, கைப்பைக்குள் இருந்து குழந்தைகள் பால் குடிக்கும் ஒரு போத்தலை எடுத்து, குழந்தைகள் போல பால் குடித்துவிட்டு, நடு ரோட்டில் அவர் செய்த செயல்கள், ராஜ குடும்பத்து உறுப்பினர்களுக்கு சற்றும் பொருந்தாதவை.
ஏன் இப்படியெல்லாம் அவர் செய்கிறார் என்று பார்த்தால், அது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக செய்த வேடிக்கையாம்.
அதாவது, நிகழ்ச்சியை நடத்துபவர் ஸ்டுடியோவிலிருந்துகொண்டு, மேகனின் காதில் பொருத்தப்பட்டுள்ள கருவி வாயிலாக என்னவெல்லாம் செய்யச் சொல்கிறாரோ, அதையெல்லாம் மேகன் செய்யவேண்டுமாம். அதற்காகத்தான் மேகன் இந்த வேடிக்கையெல்லாம் செய்தாராம்.
ஆக மொத்தத்தில், ராஜ குடும்பத்தின் மானத்தை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து சந்தி சிரிக்கவைத்துவிட்டார் மேகன்!