நான் இறங்க வேண்டும்... அதை என்னிடம் கொடு! லண்டனில் பெண் மீது திடீரென பாய்ந்த மர்ம நபர் செய்த செயல்.. புகைப்படத்துடன் முழு பின்னணி
லண்டனில் பெண் மீது பாய்ந்து அவர் செல்போனை திருடிய நபர் தொடர்பிலான முக்கிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
லண்டன் Underground இரயிலில் தான் இந்த சம்பவம் கடந்த 28ஆம் திகதி நடந்துள்ளது.
காலை 10 மணியளவில் இரயிலில் இருந்த பெண்ணை அணுகிய ஆண் ஒருவர், அவசரமாக நண்பருக்கு போன் பேச வேண்டும் என கூறி அவர் போனை வாங்கினான்.
பின்னர் போனை அவன் கொடுக்க மறுத்த நிலையில் நான் கீழே இறங்க வேண்டும் என கூறி போனை அப்பெண் கேட்க அவன் கொடுத்தார்.
இதையடுத்து வேகமாக இரயிலுக்குள் நடந்து சென்ற பெண்ணை பின் தொடர்ந்து சென்ற அந்த நபர் அவர் மீது திடீரென பாய்ந்து செல்போனை பறித்து கொண்டு தனது பையில் போட்டு கொண்டு ஓடியுள்ளான், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.
