மன்னர் சார்லசைவிட அதிக கவனம் ஈர்க்கும் மற்றொரு இளவரசி: மீண்டும் திரும்பும் வரலாறு
சார்லசுக்கும் டயானாவுக்கும் இடையிலான 15 வருட திருமண வாழ்க்கையின்போது, சார்லசைவிட அதிக கவனம் ஈர்த்தவர் டயானா. தற்போது, அதேபோல மீண்டும் ஒரு இளவரசி கவனம் ஈர்த்துவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சார்லஸ் கோபப்பட்டதாக காட்டிய தொலைக்காட்சித் தொடர்
பிரித்தானிய மன்னரின் குடும்பக் கதைகளை மையமாகக்கொண்டு வெளியாகிவரும் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில், அவுஸ்திரேலியாவுக்கு சார்லசும் டயானாவும் அரசு முறைப்பயணமாக சென்றிருந்தபோது, மக்கள் கூட்டம் டயானாவைக் காண முந்தியடிக்க, இது என்னுடைய அரசு முறைப்பயணம், ஆனால், மக்கள் கவனமெல்லாம் டயானா மீதுதான் இருக்கிறது என சார்லஸ் கோபத்துடன் கூறுவதாக ஒரு காட்சி அமைக்கட்டிருந்தது.
Hindustan Times
அது சற்றே பெரிதுபடுத்தப்பட்டக் காட்சி என்றாலும், உண்மையிலேயே எங்கு சென்றாலும் சார்லசைவிட டயானா அதிக கவனம் ஈர்த்தார்.
இந்த விடயம், சார்லசும் டயானாவும் பிரிந்த பிறகும் தொடர்ந்தது. டயானாவின் அழகு மட்டுமல்ல, அவரது கருணையும், அத்துடன் தொண்டு நிறுவனங்களில் அவர் சேவை செய்த விதமும்கூட மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
மீண்டும் திரும்பும் வரலாறு
முன்பு வேல்ஸ் இளவரசியான டயானா இப்படி சார்லசைவிட அதிக கவனம் ஈர்த்த நிலையில், இப்போதைய வேல்ஸ் இளவரசியான இளவரசி கேட்டும் அதிக கவனம் ஈர்த்து வருவதாகவும், மீண்டும் மன்னர் சார்லஸ் மீதான மக்களுடைய கவனத்தைவிட, இளவரசி கேட்டைப் பார்க்கவேண்டும் என்னும் மக்களுடைய ஆர்வம் அதிகரித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாவதால், மீண்டும் மன்னர் சார்லஸ் பின்னுக்குத் தள்ளப்படும் ஒரு நிலை உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது. அது உண்மையா என்னும் கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்!
AP